Designed by Iniyas LTD
ஜெயின் கேள்வியால் திமுகவில் சர்ச்சை
சட்டசபையில் வைத்து திமுகவின் தலைவர் யார் என முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய கேள்விக்கு, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பதிலளிக்காதது திமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து ஜெயலலிதா திமுகவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார், மேலும், திமுக கட்சிக்குள் பல்வேறு உட்பூசல்கள் உள்ளன, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியா? ஸ்டாலினா? எனவும் கேள்வி எழுப்பினார், இந்த கேள்விக்கு, அப்போது சட்டசபையில் இருந்த திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் பதிலளிக்கவில்லை, அவர் பதிலளிப்பார் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்த நிலையில், ஸ்டாலின் அமைதியாக இருந்துவிட்டார்.
இந்த பிரச்சனையால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டு, வெளியில் வந்த ஸ்டாலின் பத்திரிகையார்களிடம் கூட இதற்கான பதிலை அளிக்கவில்லை, இவரின் இந்த செயல்பட்டால் அறிவாலயத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கூட திமுகவின் முதல்வர் வேட்பாளராக கருணாநிதி அறிவிக்கப்பட்ட பின்னர்கூட, ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என ஸ்டாலினின் ஆரவாளர்கள் பிரச்சனை செய்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.