தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெ பதவியேற்பு விழாவுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக 5 வது முறையாக பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது.bomp

இந்த நிலையில், பதவியேற்பு விழா மேடையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக, காவல்துறைக்கு தொலைபேசி மூலம் ஒரு நபர் , வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது குறித்து உடனே, விசாரணை நடத்திய காவல்துறையினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நாகர்கோவிலைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், அந்த நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
Loading...