Designed by Iniyas LTD
ஜெ வழக்கில் மோடி மௌனம் சாதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் பேசிய அவர், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மவுனம் சாதிப்பதாக குற்றம் சாட்டினார். மேல்முறையீடு செய்யுமாறு கர்நாடக அரசைக் கேட்பவர்களிடம், வழக்கின் முதல் புகார்தாரர் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான் என்பதை நினைவுபடுத்த விரும்புவதாக அவர் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் தோள் மீது ஏறிக்கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக ஜெயராம் ரமேஷ் குறை கூறினார். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா தலைவர்களும் பங்கேற்றதை சுட்டிக்காட்டிய ஜெயராம் ரமேஷ், மேல் முறையீடு தொடர்பான நிலைப்பாட்டை பாரதிய ஜனதா தெளிவுபடுத்த வேண்டியது இதன் மூலம் அவசியமாகிறது என்றார்.