தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி

ஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, கருணாசேன ஹெற்றியாராச்சி அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள கருணாசேன ஹெற்றியாராச்சி, புதிய பதவியை எப்போது ஏற்றுக் கொள்வது என்று தனக்குத் தெரியாது என்றும், ஜேர்மன் அதிகாரிகளால் தமது நியமனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் பதவியேற்பு இடம்பெறலாம் என்றும் கூறினார்.

அதேவேளை, பாதுகாப்புச் செயலர் பதவியில் இருந்த தாம் நீக்கப்படுவதற்கான காரணம் மர்மமாகவே இருப்பதாகவும், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டது அதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாம் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் கருணாசேன ஹெற்றியாராச்சி கூறியுள்ளார்.

Comments
Loading...