Designed by Iniyas LTD
ஜேர்மனியில் அகதிகள் முகாமில் தீ விபத்து
ஜேர்மனியில் அகதிகள் முகாமொன்று தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் Düsseldorf விமான நிலையத்திற்கு அருகே அகதிகள் முகாம் உள்ளது, இங்கு ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளை சேர்ந்த நபர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று நண்பகல் 12.30 மணியளவில் முகாம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
உடனடியாக மீட்பு குழுவினர் விரைந்து சென்று துரித நடவடிக்கைகளை எடுத்தால், உள்ளே சிக்கியிருந்த 130 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்ற போதிலும், பலர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தங்கியிருந்த நபர்கள் வேறொரு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய பொலிசார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர். மேலும், அகதிகள் குடியிருப்பின் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக கூறும் பொலிசார், வேண்டுமென்றே அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளனர்.