தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜேர்மனி நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக உள்ள அகதிகளை வெளியேற்றுவது அவசியம்

ஜேர்மனியில் தஞ்சம் கோரி தங்கியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் சட்டத்திற்கு எதிராக இருந்தால், அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Bremen நகரில், கடந்த வெள்ளியன்று Christian Democrat (CDU) கட்சியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் Christian Democrat (CDU) கட்சியினர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த உள்துறை பாதுகாப்பு அமைச்சரான Thomas de Maizière, தகுதியற்ற விண்ணப்பங்களை நிராகரிப்பதுடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

ஜேர்மனி குடிமக்களின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக உள்ள அகதிகளின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதை விட, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது அவசியம் என Thomas de Maizière தெரிவித்துள்ளார்.germany

மத்திய அரசின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert கூறுகையில், எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி, ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், துணை அதிபர் சிக்மர் கேப்ரியல் உள்ளிட்ட தலைவர்கள், இது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்களுக்கு அரசிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற அதிருப்தியும் நிலவி வருகிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகளிலேயே ஜேர்மனியில் மட்டும் தான் அகதிகள் குடியேறுவது அதிகளவில் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு தற்காலிகமாக இருப்பிட வசதிகளை ஏற்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஜேர்மனியில் தஞ்சம் கோரியர்வர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்க 1,27,023 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2014ம் ஆண்டு 2,02,834 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இது 2015ம் ஆண்டு இறுதிக்குள் 3,00,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இடம்பெயர்வு மற்றும் அகதிகளுக்கான (Migration and Refugees (BAMF)) அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...