தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டங்களை நடத்துவோம் – அன்புமணி ராமதாஸ்

andu-mani2016ல் ஆட்சி அமைக்கும் போது பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், ”தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. வரும் 2016-ல் ஆட்சி மாறும்  பாமக ஆட்சி அமைக்கும். அப்போது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கையெழுத்தாக இருக்கும்.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை வரும் 17ஆம் தேதி மூட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடாவிட்டால் பொதுமக்களின் ஆதரவோடு நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை 1ஆ-ம் தேதி முதல் நாங்களே இழுத்து மூடும் போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...