தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டிசம்பர் 10 ல் முல்லைமாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி தொடர் கவனயீர்ப்பு கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்தனர்.

அவர்களின் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 365 ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கிறது

இந்நிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டம் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  அனைத்து தரப்பையும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி தங்கள் பிள்ளைகளை தேடி கண்டறிய அணிதிரளுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...