தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டிரம்பின் கையை தட்டிவிட்ட மனைவி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையை அவரது மனைவி மெலினா பொது இடத்தில் வைத்து தட்டிவிட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட டிரம்புக்கு டெல் அவிவ் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்போது டிரம்ப் மற்றும் மெலினா தம்பதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அழைத்து சென்றனர்.

நான்கு பேரும் நடந்து வந்து கொண்டிருந்த போது மனைவி மெலினா கையை பற்றுவதற்காக டிரம்ப் நீட்டினார். ஆனால் அவர் டிரம்பின் கையை தட்டி விட்டார்.இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் வைரலாக பரவியது.

டிரம்புக்கும் மெலினாவுக்கும் இடையில் ஏதோ மோதல் இருக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Comments
Loading...