Designed by Iniyas LTD
டி-56 துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
டி-56 ரக துப்பாக்கியுடன் நபரொருவர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து டி-56 ரக துப்பாக்கி மற்றும் 10 துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்டியாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மனித கொலை சம்பவத்தில் குறித்த நபருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை அம்பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.