Designed by Iniyas LTD
டென்மார்க்கில் தமிழ் வான்

சோசலிச ஐனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டவர் – இணைவாக்க குளுவின் தலைவரும் மற்றும் கலாச்சார ஊடகத்துறை பேச்சாளராகவும் பதவிகளை வகிக்கும் ற்றோல்ஸ் பாவுடனும் மனிதவுரிமை பிரதிநிதி எறிக் கன்றியுடனும் இன்றைய சந்திப்புகள் இடம் பெற்றன.
இங்கு இனப்படுகொலைக்கு எதிராக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதற்கு டென்மார்க் தனது முழுமையான ஆதரவை அளிக்க வேண்டுமென்றும் சிறைச்சாலையில் வாடும் எமது உறவுகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் மக்களின் காணிகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஐ.நாவின் மேற்பார்வையில் தாயகம் புலம்பெயர் வாழ் தமிழர் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அறிந்து கொள்ள வேண்டு மென்றும் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இச் சந்திப்பின்போது நோர்வேயிலிருந்து ஆரம்பித்து சுவீடனூடாக வந்த தமிழ் வான் – பரப்புரையாளர்களும் இதில் கலந்து கொண்டனர். பின் இவர்கள் டென்மார்க் தலைநகர மாநகரசபை முன்னால் டெனீஸ் மக்களிற்கான பரப்புரை வேலையும் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தலும் நடைபெற்றது. இறுதியில் வைல நகரத்தில் ஒன்றுகூடலுடன் தமிழ்வான் ஜேர்மன் நாட்டை நோக்கிப்புறப்பட்டது.