தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் – வைகோ கைது

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.vaikko

அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தினால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

தஞ்சையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு வர்த்தகர் சங்கங்களும், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Comments
Loading...