Designed by Iniyas LTD
டெல்லியில் கடந்த ஓராண்டாக மத கலவரமோ – மோதல் சம்பவமோ நடக்கவில்லை – ராஜ்நாத்சிங்
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசியதாவது: பாட்டியாலா நீதிமன்ற வளாக தாக்குதல் சம்பவம் எதிர்பாராதது. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் நடந்த தகவல் கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு வலியுறுத்தினேன்.
பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்கவும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் டில்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். டெல்லியில் கடந்த ஓராண்டாக மத கலவரமோ அல்லது மத மோதல் சம்பவமோ நடக்கவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.