Designed by Iniyas LTD
டெல்லியில் ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரம்
டெல்லியில் ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரம் தொடங்கினார். பிரமாண்ட பேரணியில் பேசிய அவர் ஏழைகளுடன் கரம் கோர்த்து மீண்டும் நாட்டை வளர்ச்சியை நோக்கி வழிநடத்தப்போவதாக சூளுரைத்தார்.
டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படுகிற கல்காஜி பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனி என்ற இடத்தில், பிரமாண்ட பேரணியில் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் ஏழைகளுக்கான கட்சியாகும். நீங்கள் மீண்டும் வந்து ஏழைகளுடன் கரம் கோர்ப்போம். பிரதமர் நரேந்திர மோடி தன்னை பிரபலப்படுத்துவதில்தான் கவனத்தை செலுத்துகிறார். அவர் எல்லாவற்றையும் பேசுகிறார். செயல்தான் இல்லை. ஒரு வேலை கூட நடக்கவில்லை. மோடி எப்போது பேச்சை நிறுத்துவார், எப்போது வேலை செய்ய தொடங்குவார் என்பதுதான் இப்போது டெல்லி மக்களின் கேள்வி.
இந்த ஆட்சியில் 3 அல்லது 4 தொழில் அதிபர்கள்தான் பலன் அடைகின்றனர். ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். நாங்கள் எப்போது பலன் அடையப்போகிறோம் என்று ஏழைகள் கேள்வி கேட்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.