Designed by Iniyas LTD
டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் இலங்கையில் கைது..
இலங்கையில் தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளரான சித்திக் அகமத் டெனிஷ் என்பவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகான சூழ்நிலை குறித்து செய்தி சேகரிக்கப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தேவலாயம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான மாணவர் குறித்து செய்தி சேகரிக்க நெகோம்போ நகரத்தில் உள்ள பள்ளிக்கு சென்றுள்ளார்.
அந்த பள்ளிக்குள் வெளியாட்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தடையை மீறி உள்ளே சென்ற நிலையில் பொலிஸாரால் குறித்த பத்திரிகையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை 15ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.