Designed by Iniyas LTD
டொரே ஹட்டிரம் – சம்மந்தன் சந்திப்பு
இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹட்டிரம் தலைமையிலான குழுவினர், எதிர்க்கட்சித் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை நேற்று மாலை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், அபிவிருத்தி ஆகிய விடயங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் டொரே ஹட்டிரம் இலங்கை வந்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ள அவர், நேற்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, இன்று யாழப்பாணம் செல்லவுள்ள அவர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், வளலாய் பகுதியில், ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஊடாக, நோர்வேயின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
