Designed by Iniyas LTD
டொல்பின் வாகனத்தில் சென்ற இளைஞர் மூவர் வவுனியா பொலிஸாரால் கைது….
இன்று அதிகாலை ஓமந்தை சந்தி பகுதியில் டொல்பின் ரக வாகனத்தில் கிளிநொச்சியிலிருந்து கிண்ணியா, திருகோணமலைக்குச் சென்ற மூன்று இளைஞர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வாகனத்தினை பொலிஸார் சோதனை இட்டபோது, வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 7 கிலோ 924 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகனச் சாரதி உட்பட 19, 26, 32 வயதுடைய மூவரைக் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நாளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

