Designed by Iniyas LTD
தங்க ஆடை மற்றும் பிரமாண்டமான கேக்! களைகட்டிய திருமணம்
ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் பிரபல எண்ணெய் நிறுவன தொழிலதிபரான Madina Shokirova வின் மகள் Ilkhom Shokirova விற்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் 9000 க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஜோடியாக வந்த மணப்பெண் மற்றும் மணமகனை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
காரணம் மணப்பெண் அணிந்திருந்த ஆடை வியக்க வைக்கும் அளவிற்கு இருந்துள்ளது. தங்க இழை பதித்த இந்த திருமண ஆடையை இங்கிலாந்தை சேர்ந்த பிரபல காஸ்டியூம் டிசைனர் வடிவமைத்துள்ளனர். இதன் விலை சுமார் ரூ.9 கோடி வரை இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து திருமண தம்பதிக்கு 10 அடி உயரம் கொண்ட ராட்சத கேக்கை வெட்டுமாறு பரிசளித்தனர். தொடர்ந்து ஆடல் பாடல் என திருமண வரவேற்பு நிகழ்ச்சி களைகட்டியது.