Designed by Iniyas LTD
தடகளப்போட்டியில் கிளிநொச்சி மத்திய வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்..
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 20 வயதுப் பெண்கள் பிரிவு 800 மீற்றர் ஓட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம செய்த ரி.டென்சிகா 2 நிமிடங்கள் 33 செக்கன்கள் 30 மில்லி செக்கன்களில் ஓடிமுடித்துத் தங்கப்பதக்கத்தைத் தனதாக்கி உள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.டிலக்சனா 2 நிமிடங்கள் 36 செக்கன்கள் 50 மில்லி செக்கன்களில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கத்தையும்,
யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.ஆன் 2 நிமிடங்கள், 37 செக்கன்கள், 90 மில்லி செக்கன்களில் இலக்கை அடைந்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
