Designed by Iniyas LTD
தடையை மீறி மெரினாவில் அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி செலுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் உள்ளிட்ட பலர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக நினைவேந்தல் கூட்டம் மெரினா கடற்கரையில் நடத்தக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இதனை மீறி தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மெரினாவில் கூடக் கூடும் என்று தகவல் வெளியானது. இதையடுத்து சென்னை மெரீனாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். கடற்கரை உள்சாலைக்கு செல்லும் பாதைகளை காவல்துறையினர் மூடினர்.
