தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தண்டராம்பட்டு அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை

201704041726065926_Thandarampattu-near-child-murder-mother-suicide_SECVPFதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மணி, மகள்கள் சரஸ்வதி (வயது 25) மற்றும் சரளா (25). இருவரும் இரட்டை பிறவிகள். சரஸ்வதிக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டில் அமர்ந்த புதூர் என்கிற அமத்தபுதூர் கிராமத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ரமேஷ் (28) என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு அனுஸ்ரீ (3½), கவுசல்யா (2) என்று இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் சரஸ்வதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

நேற்றிரவு வீட்டில் தனது 2 பெண் குழந்தைகளுடன் சரஸ்வதி சாப்பிட்டு விட்டு தூங்கினார். நள்ளிரவு 12 மணிக்கு அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, கணவர் மணி வீட்டில் இல்லை.

இதனால் செங்கம் அம்மாபாளையத்தில் உள்ள தனது தாய் மணிக்கு போன் செய்தார். வயிற்று வலி அதிகமாக இருப்பதால், நீங்கள் வந்து தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் படி சரஸ்வதி கூறி கதறி அழுதுள்ளார்.

தாய் மணி, அமத்த புதூருக்கு உடனடியாக புறப்பட்டார். இன்று அதிகாலை 3 மணிக்கு மகள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கதவை திறந்து பார்த்தபோது மகளும், அவருடைய இரு குழந்தைகளும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

உடனடியாக, 3 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உடனடியாக இறந்து விட்டார். குழந்தை கவுசல்யாவும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மற்றொரு குழந்தை அனுஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். தகவல் கிடைத்ததும் தண்டராம்பட்டு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு சரஸ்வதியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் வயிற்று வலி காரணமாக குழந்தையை கொன்று விட்டு சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments
Loading...