Designed by Iniyas LTD
தந்தையின் சடங்கிற்கு செல்ல நளினிக்கு மீண்டும் பரோல் வழங்கப்படுமா?
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, உயிரிழந்த தனது தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். வேலூர் சிறையில் உள்ள நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்தார். அப்போது, மத்திய, மாநில அரசுகள் தன்னை விடுதலை செய்யும் என்று நம்புவதாக நளினி தெரிவித்தாராம்.
சமீபத்தில் நளினியின் தந்தை மரணமடைந்தார். அப்போது நளினி பரோலில் வெளிவந்து, இறுதி சடங்கில் கலந்து கொண்டார். இந்நிலையில், நளினியின் தந்தை ஈமக்காரியங்களுக்காக மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் இன்னும் அதன் மீது காவல்துறை முடிவெடுக்கவில்லை. திங்கள்கிழமைக்குள் பரோல் கொடுக்கவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய புகழேந்தி திட்டமிட்டுள்ளாராம். நளினிக்கு பரோல் கிடைக்குமா என்பது குறித்த தகவல் நாளை தெரியவரலாம் என்கிறது சிறைவட்டாரம்.
தொடர்புடைய பதிவு