தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தனிஈழம் தொடர்பான தமிழக தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு கவனமெடுக்கவே தேவையில்லை

தனி ஈழம் தொடர்பாக தென்னிந்திய அரசியல் கட்சிகள் குறிப்பிடும் கருத்திற்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழக தேர்தல் பிரசார மேடைகளில் பேசப்படும் விடயங்கள் அனைத்தும் தேர்தலின் பின்னர் மறைக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாரிய போராட்டத்திற்கு பின்னர் 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிரிவினைவாத செயற்பாடுகள் தோற்றம் பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்

Comments
Loading...