தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தனியார் மயமாக்கப்படவுள்ள மாத்தள விமான நிலையம்

ராஜபக்ஷ மத்தள சர்வதேச விமானநிலையம் இந்த வருட இறுதிக்குள் தனியார் மயப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.maththala

இது தொடர்பில் மூன்று சீன தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையம் சீன அரசாங்கத்தினால் கட்டப்பட்டதோடு, இதுவரை எந்தவொரு திட்ட முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த விமானநிலைய நிர்மாணப் பணிகளுக்காக பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்கான வழிவகைகளை அரசாங்கம் இடைநடுவில் கைவிட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக பெறப்படும் வருமானத்தின்மூலமே மத்தள விமான நிலையத்துக்கான கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. சீன நிறுவத்தின் 190மில்லியன் நிதியுதவியுடன் 209மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ஷ விமானநிலையம் கடந்த 2013ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...