Designed by Iniyas LTD
தமக்கெதிராக சாட்சியங்களை திரட்டும் நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார்மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா –

தமிழர்தாயகத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடையச் சென்ற புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சாட்சியாளர்களிடம் நவனீதம்பிள்ளை சாட்சியங்களை திரட்டி வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பிலான சாட்சியாளர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் யார் என்பது இன்னமும் குறிப்பிடப்படவில்லை.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.