தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமது கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் உறுப்பினர்களின் சொத்து விவரம் பகிரங்கப்படுத்தப்படும்….!!!!

தமது கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டும் உறுப்பினர்களின் சொத்து விபரங்களைப் பகிரங்கப்படுத்தப்படும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணி இன்று (28) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இவற்றைப் பார்க்க விரும்புவோர் தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றைப் பார்வையிடலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்களை மாத்திரம் பகிரங்கப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை அறிவதன் மூலம், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் முறைகேடாக சொத்து சேகரித்தாரா என்பதை அறிய முடியும்” – எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...