தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா முதல் தென் தமிழக கடலோரப் பகுதிவரை வளி மண்டல அடுக்கில் காற்றில் சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.rain

அதன் காரணமாக, வட தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, உத்திரமேரூர் மற்றும் தாம்பரத்தில் தலா 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Comments
Loading...