Designed by Iniyas LTD
தமிழகத்தில் இருந்து 13 அகதிகள் தாயகம் திரும்பினர்!
தமிழ் நாட்டின் பல்வேறு முகாம்களில் வசித்து வந்த 13 ஈழத் தமிழர்கள் நேற்றையதினம் நாடு திரும்பினர். மதுரையில் இருந்து கொழும்பு நோக்கி அவர்கள் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான உதவிகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையும், ஜேர்மன் தூதரகமும் வழங்கியுள்ளன. அவர்கள் திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் குடியேற்றப்படவுள்ளனர்.
இதேவேளை தமிழ் நாட்டில் இருந்து எதிர்வரும் 28ம் திகதி மேலும் ஒரு தொகுதி அகதிகள் நாடு திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது