தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

“தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது”:தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

TAMILISAI_2380070fதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை பாரதிய ஜனதாவினால் மட்டுமே கொடுக்க முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழ்நாட்டில் மின்வெட்டுப் பிரச்னையும், பச்சிளம் குழந்தைகள் இறப்பும் அதிகரித்துள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத சாதனைகளை தற்போது மத்திய அரசு ஓராண்டில் செய்துள்ளதாக பெருமிதத்தோடு தெரிவித்தார்.

Comments
Loading...