Designed by Iniyas LTD
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை – இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு மழை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை புரட்டி போட்ட வெள்ளத்திலிருந்து மக்கள் மீண்டுவருகின்றனர்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது தவிர, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவுகள் இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.