Designed by Iniyas LTD
தமிழகத்தில் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சமூக விரோதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு, மாமல்லபுரம் அருகில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சமீப காலமாக தமிழக காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள வைகோ, தமிழகத்தின் சட்டம் ஓழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.