தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது – எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   தமிழகச் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ராதாபுரம் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, தன்னுடைய தொகுதியில் விபத்துக்களைத் தடுப்பதற்குத் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பாலங்கள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.  palanisamy

அதற்குப் பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள்  மற்றும் பாலங்கள் அமைக்க, கடந்த 4 ஆண்டுகளில் 2,991 கோடி ரூபாய் ஒதுக்கிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.   தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2010ஆம் ஆண்டு வாகன எண்ணிக்கை 1 கோடியாக இருந்தபோது, 10,000 வாகனங்களுக்கு 12 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும்,  தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 50,000 உயர்ந்துள்ளதாகவும், 10,000 வாகனங்களுக்கு விபத்து உயிரிழப்பு 7ஆகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Comments
Loading...