தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் தொடங்கியது வட கிழக்கு பருவ மழை!

rainதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் திடீரென மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பொதுவாக தீபாவளி பண்டிகை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவ சூழ்நிலை காரணங்களால் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கும் என வாணிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.

காலம் காலமாக தீபாவளி பண்டிகையை மழையோடு கொண்டாடி மக்கள் வர்ணபகவான் கருணையால் நேற்று மழையில் குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மாலை நேரங்களில் கோவில், திரையரங்குகள், சுற்றுலா தளங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்றிரவு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், சென்ட்ரல், அண்ணா நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது. சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றததை காண முடிந்தது.

மழைக்காலம் தொடங்கவுள்ளதால், நகரில் சாலையில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், மழை நீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பால‌ன இடங்களில் நேற்றிரவு முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது.

Comments
Loading...