தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டம் : ஜி.கே.வாசன் அறிவிப்பு

gk-vasanதமிழ் மாநில காங்கிரஸ் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி வருகின்ற ஜூன் 5-ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவது, சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தமிழக அரசு வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...