Designed by Iniyas LTD
தமிழகத்தை வரட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை!
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பருவமழை பொய்த்துப் போய்விட்டது. காவிரியில் நீர் வராமல் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் பருவமழை பொய்த்துப் போனதால் வாழ்வாதாரத்தை இழந்து மனமுடைந்து போயுள்ளனர்.
வறட்சியால் பயிர்கள் கருகிப் போனதைக் கண்ட அதிர்ச்சியாலும், கடன் சுமையாலும் கடந்த சில மாதங்களில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பிலும், தற்கொலையிலும் உயிரிழந்துள்ளனர்.
இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இறந்த விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.