Designed by Iniyas LTD
தமிழகம் முழுவதும் 2 ஆம் தவணை போலியோ
தமிழகம் முழுவதும் 2 ஆம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இது குறித்து, தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- 
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 21 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என 43,051 சொட்டு மருந்து மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும், முக்கிய பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளார்.