Designed by Iniyas LTD
தமிழக அரசை பாஜக அரசு ஆட்டுவிப்பதை ராஜேந்திர பாலாஜி உறுதி செய்துள்ளார் : மு.க.ஸ்டாலின்
கோவூரில் குளம் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பிறகு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழக அரசின் குளம் தூர்வாரும் பணியில் ஊழல் நடைபெறுகிறது என்றும் தமிழக அரசை பாஜக அரசு ஆட்டுவிப்பதை ராஜேந்திர பாலாஜி உறுதி செய்துள்ளார் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பெரும்பான்மை குறைந்தால் ஆளுநர், குடியரசு தலைவரை சந்திப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மக்கள் பணியை தவிர்த்து, ஆட்சியை தக்க வைக்கும் அரசாகவே, தமிழக அரசு உள்ளது என்றும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.