Designed by Iniyas LTD
தமிழக உளவுத்துறை ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்!
தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், சென்னை காவல்துறை நலவாரிய ஐ.ஜி. ஆக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் முதன்மைச் செயலர் அபூர்வா வர்மா இதற்கான உடனடி உத்தரவை வழங்கியுள்ளார். பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த போது டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுத்துறை ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், உளவுத்துறை ஐ.ஜி மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.