Designed by Iniyas LTD
தமிழக காங்கிரசுக்கு இன்னும் 2 நாட்களில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார்
சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருநாவுக்கரசர், குமரிஅனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, நடிகை குஷ்பு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன், சிரஞ்சீவி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டமன்ற காங்கிரஸ கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, பவானி ஆறு ஆகிய பிரச்சனைகளில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் பி.ஆர். பாண்டியனை ஒருங்கிணைப்பாளராக கொண்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கள் வருகிற ஆகஸ்டு 30-ம் நாளில் தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்புக்கும் மற்றும் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழக காங்கிரசுக்கு இன்னும் 2 நாட்களில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க் கள் வசந்தகுமார், ராஜேஷ் குமார், கணேஷ் மற்றும் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் பாலமுருகன், வி.ஆர். சிவ ராமன், மற்றும் தணிகாசலம், அருள்பெத்தையா, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், வில்லிவாக்கம் சுரேஷ், இல.பாஸ்கரன், சூளை ராஜேந்திரன், நாச்சிக்குளம் சரவணன், விருகை எஸ்.வி. ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.