Designed by Iniyas LTD
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு உட்பட 10 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமமோகன் ராவ் மற்றும் அவரது மகனின் வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகள் என சுமார் 10 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன் ராவின் வீட்டுக்கு இன்று காலை 5 மணியளவில் சென்ற வருமான வரித்துறையினர், 6 மணியில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போல, மணப்பாக்கத்தில் உள்ள ராமமோகன் ராவின் மகனின் வீடு மற்றும் அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.