தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மாணவர் மரணம்: முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

edappadi_k_palanisamyமரணம் அடைந்த டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு 3 ஆம் ஆண்டு மாணவர் முத்துகிருஷ்ணன். சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த திங்கள்கிழன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த முத்துகிருஷ்ணன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துகிருஷ்ணனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாகச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மாணவனின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Comments
Loading...