தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்களை நாங்கள் தாக்கவே இல்லை!

Tamil-Daily-News_69167292119கச்சதீவுப்  பகுதியில்  இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு  ஸ்ரீலங்கா  கடற்படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். கச்சதீவுக்கு அருகில் தாக்குதல் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கடற்படையின் பேச்சாளர் அக்ரம் அலவி  தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கைக்  கடற்பரப்பினுள்  அத்துமீறி நுழையும் போது  மாத்திரமே அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் .
இதேவேளை, ஸ்ரீலங்கா  கடற்படையினர் அப்பாவிகள் மீது தாக்குதல்களை நடத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றின் தகவல்படி ஸ்ரீலங்கா கடற்படையினர் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 10 இந்திய மீனவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும் இதனை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று அவர்  மேலும்   தெரிவித்துள்ளார்.
Comments
Loading...