தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்கள் நால்வர் ஸ்ரீ கடற்படையால் கைது!

Untitled‘இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்றக் குற்றச்சாட்டில் தாயகத்தின் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, 4 தமிழக  மீனவர்கள் ஸ்ரீலங்கா  கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்’ என யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தமிழக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் படகொன்றில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீலங்கா கடற்படையினரிடமிருந்து இவர்களை பொறுப்பேற்ற நீரியல் வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments
Loading...