Designed by Iniyas LTD
தமிழக மீனவர்கள் மீது சிறி.கடற்படை துப்பாக்கி சூடு
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு நேற்று மீன் பிடிக்க 500-க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இதைதடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்து 5 மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்தனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.