Designed by Iniyas LTD
தமிழக மீனவர்கள் மீது பெற்றோல் குண்டுகள் வீசிய சிறிலங்கா கடற்படையினர்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான படகு தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அந்த படகில் இருந்த மீனவர்கள், கடல்நீரை கொண்டு படகில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பயந்துபோன தமிழக மீனவர்கள், உடனடியாக அங்கிருந்து கிளம்பி இன்று காலை இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
மேலும், இதுகுறித்து படகின் உரிமையாளர் தமிழக மீன் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை இலங்கை செல்ல உள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தமிழக் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.