தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக முதல்வரை அவமரியாதை செய்ததை வேடிக்கை பார்த்த கன்னட முதல்வர்!

sede-450x188தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நேற்று பந்த் நடத்தபட்டது.

அதை பயன்படுத்தி கன்னடர்கள் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் எனவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாடை கட்டி இறுதி ஊர்வலம் போன்று ஆங்காங்கே நடத்தபட்டது எனவும்,இதை தடுக்கவேண்டிய போலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்தனர் எனவும் தேசிய ஜன சேன அமைப்பினர் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியதாவது கர்நாடக அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தையும் மதிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிக்கின்ற வகையில் கலவரத்தில் ஈடுபடுவது கன்னடர்களின் நாகரிகத்துக்கு கேவலம்!

தமிழக அரசியல் தலைவர்களில் முக்கியமானவரும் தமிழக முதல்வரை வரம்பு மீறி அவமரியாதை செய்வதை வேடிக்கை பார்க்கும் கர்நாடக அரசை வண்மையாக கண்டிக்கிறோம் .

தமிழக முதல்வரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது கர்நாடக காவல் துறை கடுமையாக எச்சரித்தும் கன்னட அமைப்புகள் பகிரங்கமாக கலவரம் நடத்துவோம் என சொல்லி தமிழர்களை அச்சுறுத்துவதை கர்நாடக முதல்வர் வேடிக்கை பார்ப்பதா ?

உடனே உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசியல் வாதிகள் ஆலோசிக்க வேண்டும் . மூத்த அரசியல்வாதி கருணாநிதி வாய்மூடி மௌனம் சாதிப்பது ஏன் ?  பாமக எங்கே? மதிமுக எங்கே?

சாதிகட்சித்தலைவர்கள் கன்னட அரசியல்வாதிகளுக்கு கலவரம் செய்திடவும் தமிழக முதல்வர் உருவ பொம்மைக்கு தீ வைப்பது பாடை கட்டுவது, ஈமச்சடங்கு செய்வதர்க்கு போதிய அவகாசம் கொடுக்கும் காவல்துறைக்கும் கன்னட முதல்வருக்கும் கடும் கண்டணம் தெரிவிக்கிறது.

இனி முதல்வர் படத்தை எரிக்கவோ இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்தால் பதிலடி கிடைக்கும் என எச்சரிக்கிறோம் என்று தேசிய ஜன சேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...