தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது!

Santosh-Gangwar-300x188விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்படுள்ளதாவது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. எனினும் விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்கு மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி விவசாயிகளுக்கு குறைந்தப்பட்சமாக 7 சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை வேளாண் மற்றும் கூட்டுறவு கடன்கள் விவசாயிகள் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடன் தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்கும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரையிலும் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.
தேசிய பேரிடர்கள் ஏற்படும்போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரண நடவடிக்கைகளை அளிக்கும்படி கடன் அளிக்கும் அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...