தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழரசுக்கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் கைது !

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முப்புரம் வட்டாரத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மூலக்கிளை தெரிவின் பின்னர் பொதுமகன்கள்  இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு போலீசார் தெரிவித்தனர் .

நேற்றையதினம் (31.03.2019) தமிழரசுக்கட்சியின் முப்புரம் வட்டாரத்திற்கான மூலக்கிளை நிர்வாகத் தெரிவு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் முன்னிலையில் நடைபெற்றது.

மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு  நிர்வாகத் தெரிவில் தலைவருக்கான வாக்கெடுப்பு தேர்வில் முல்லை ஈசன்   வெற்றி பெறுள்ளார் முப்புரம் வட்டாரத்தினை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் தோல்வியுற்றுள்ளார்.  .

இதன் பின்னர் பொதுமகன்கள்  இருவர் மீது தாக்குதல் நடத்தியதாக புதுக்குடியிருப்பு பொலீசாரில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைமாவாக புதுக்குடியிருப்பு பொலீசாரால் தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாளை குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

Comments
Loading...