Designed by Iniyas LTD
தமிழர்களின் உணர்வுகளை ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம் – ததேகூ
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று புதுடில்லியில் நிருபரிடம் அவர்கள் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னையில் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறோம். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்