Designed by Iniyas LTD
தமிழர்களை படுகொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள் வெளியே வந்தது! மாத்தளையில் பரபரப்பு
மாத்தளை புதிய பிரதேச செயலகத்துக்கு கட்டடம் அமைப்பதற்காக அத்திபாரம் தோண்டிய போது, பல வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிகள் 137, ரிவோல்வர் 6இன் பாகங்கள் உள்ளிட்ட இன்னும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. துருபிடித்த நிலையில் காணப்பட்ட இந்த ஆயுதங்களை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் கூறினர். கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகளை மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.பீ.எச்.எம்.ஷேசிறி ஹேரத, பார்வையிட்டார்.
குறித்த ஆயுதங்கள் அங்கு எப்படி அங்கு புதைக்கப்பட்டன என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் கலகம் மற்றும் 1988 , 1989 ஆண்டுகளில் இரண்டாவது கலகம் என்பன மாத்தளை மாவட்டத்தில் ஏற்பட்டிருந்தன. இதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் , கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாத்தளை வைத்தியசாலை பூமியில் இருந்து, பல வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.